Tamizhar Veeram - தமிழர் வீரம்
தமிழர் செந்திறப் போர்த்துறை அனைத்தும் முறைபடத் தொகுத்து, வரிசைப்படுத்தி எளிதில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் இவ்வுரை நூலில் விளக்கிய ஆசிரியர் புலமைத் திறம் பாராட்டதக்கது. போர்க்கொடியேற்றம், படைத்திறம், போர்க்களம், மறமானம், தானைவகை, நிலப்படை, கடற்படையாட்சி, கோட்டை கொத்தள மாட்சி, பேராண்மை, மாதர் வீரம், வீரக்கல், விருதுவகை எல்லாம் நிரல்படத் தொகுத்து திறம்பட வகுத்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
புறநானூறு, திருக்குறள், பெருந்தொகை, புறத்திரட்டு முதலிய பெரு நூல்களும், அவை கூறும் அருந்திறற் செய்திகளும் இதில் அழுகுற எடுத்து ஆளப்படுகின்றன. பண்டைத் தமிழர் போர் மரபும், மற மாண்பும் வீரர் அறப் பரிசும் எல்லாம் சிறிய இவ்வொரு நூலே செரிய விளக்கும் பெற்றியும், இதன் பொருள் நிறைவும் சொல்வளமும் வியப்பொடு நயப்பும் விளைவிக்கின்றன. தமிழர் வீரம் என்ற இந்நூலினை சிந்தனை விருந்தகம் உவகையுடன் வெளியிடுகிறது.
Author: Ra.P. Seethuppillai
- Pages: 104
Styled With