Tamizhar Varalaru - தமிழர் வரலாறு
தமிழர் வரலாறு
"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்."
இவ்வுலகில் தமிழனைப்போல முன்பு உயர்ந்தவனுமில்லை; பின்பு தாழ்ந்தவனுமில்லை. முதன் முதல் நாகரிக விளக்கேற்றி நானில முழுதும் அகவொளி பரப்பியவன் தமிழனே. தெற்கில் ஈராயிரங்க கல் தொலைவு நீண்டு பரந்திருந்த (தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி நாடும் அடங்கிய) குமரிக்கண்டம் இந்துமாவாரி யென்னும் தென் பெருங்கடலில் மூழ்கிய பின், முதலிரு கழகப் பல்துறைப் பல்லாயிரம் தனித்தமிழ் நூல்களும் கடல் கோள்களாலும் ஆரியராலும் அழிக்கப்பட்டு மூவாயிரம் ஆண்டு ஆகியுள்ள இன்றும், இருநடைப்பட்ட மொழியமைப்பிலும், முத்திறப்பட்ட இலக்கண வடிப்பிலும், இசை நாடக வளர்ச்சியிலும், நாற்பொருள் தழுவிய அறவியல் இலக்கியத்திலும், பண்பாட்டுச் சிறப்பிலும், தமிழ்நாட்டிற் கொப்பாக வேறெந்த நாடுமில்லை.
Author - Thevaneyabavanar
- Pages: 368
Styled With