Mundru veera Veerargal - மூன்று வீர தீரர்கள்

Mundru veera Veerargal - மூன்று வீர தீரர்கள்

Rs. 236.00

Mundru veera Veerargal - மூன்று வீர தீரர்கள்

Rs. 236.00

Mundru Theera Veerargal

16.20களில் பிரான்ஸ் நாடு சண்டைக்களமாக இருந்தது. பளிச்சென மின்னும்  வாட்களும், பளீரென ஒளிபரப்பி ஓசையுடன் வெடிக்கும் துப்பாக்கிகளுமாக பிரான்ஸ் நாடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. செல்வந்த குடும்பங்கள் பிற பணக்காரக் குடும்பங்களுடன் மோதிக் கொண்டிருந்தன. மன்னர் பதின்மூன்றாம் லூயிக்கும், பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய மதத்தலைவரான கார்டினலுக்கும் இடையே பகைமை முற்றி வளர்ந்திருந்தது. மன்னருக்கும், அரசிக்கும் இடையே திருமண உறவு கசந்து விட்டிருந்தது. இருவருக்கும் இடையே எடுத்ததற்கு எல்லாம் மௌன சண்டை. ஏட்டிக்குப் போட்டி. இந்தநிலையில் அரசிக்கு எதிராக கார்டினல் மெல்ல காய் நகர்த்தத் தொடங்கினார். அவரது இலக்கு பிரான்ஸ் நாட்டின் அரசாட்சி!

இதற்கிடையே மன்னர் பதின்மூன்றாம் லூயியின் சிறப்புப் படையணி வீரர்களான மஸ்கிடியர்ஸ்களுக்கும், கார்டினலின் சிறப்புக் காவல் படையினருக்கும் இடையே அவ்வப்போது முட்டல்கள், மோதல்கள் நடந்து வந்தன. இந்த இருதரப்பினருமே வாள்வீச்சில் வல்லவர்கள். குறிப்பாக மஸ்கிடியர்ஸ் எனப்படும் மன்னரின் சிறப்புப் படையணி வீரர்கள் போரிடுவதில் வல்லவர்கள். அந்தப் படையணியில் சேர வேண்டும் என்பது பிரான்ஸ் நாட்டு இளைஞர்கள் பலரது கனவாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் தொடங்குகிறது நமது கதை.

 

Author - Mohan Ruban 

Styled With

Mundru veera Veerargal - மூன்று வீர தீரர்கள்

You may also like