A9 Nedunchalai
A9 Nedunjalai
1948ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றபோது சிங்கள ஸ்ரீலங்கா என்னும் சிறைச்சாலைக்குள் ஈழத்தமிழர்கள் சிக்கிக் கொண்டனர். காலம்காலமாக சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு தமிழர்கள் ஆட்பட்டனர்.அடிக்கடி இனக்கலவரம், படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள் தொடர்கதையாயின இலங்கையில் இனி வாழவே முடியாது என்ற ஒரு நிலை தமிழர்களுக்கு ஏற்படத் தொடங்கியது. 'சுவாசிக்க முடியாத நிலையில் சுவரை உடைக்கலாம்' என்பதுபோல தமிழினம் உயிர்த்தப்ப ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவானது.
ஈழத்தின் மலர்ப்பாத்திகளில் இறங்கிய சிங்கள ராணுவ பீரங்கி வெடிகள் நாளும் நாகரீகத்தின் சவ ஊர்வலத்தை நடத்த முயன்றபோதுதான் பூப்படைந்து வெடித் தீர்த்தது புதிதாக ஒரு காந்தள் மொட்டு. அது ஆயுதப்போராட்டம் என்ற மொட்டு ஈழத்தில் 29 இயக்கங்கள் இருந்தாலும் அவற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பே சிங்கள ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி, தமிழீழ மக்கள் நடுவில் நம்பிக்கையை விதைத்தது. கெரில்லா ராணுவமாக இருந்தும், வடக்கில் தமிழர்கள் அதிகம் அடர்ந்து வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தை தனது கையிருப்பில் புலிகள் அமைப்பு கொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவத்துடன் மோத வேண்டிய இக்கட்டான நிலை புலிகள் அமைப்புக்கு ஏற்பட்டது. 1983 முதல் ஜூலை 1986 வரை நடந்த அதுவே முதல் ஈழப்போர். அதைத் தொடர்ந்து அதிபர் பிரேமதாச காலத்தில் இலங்கை ராணுவுத்துடன் ஒரு முட்டல் மோதல் நிகழ்ந்தது. ஜூன் 1990 முதல் ஆகஸ்ட் 1994 வரை நடந்த அது இரண்டாம் ஈழப்போர். இப்போது நாம் காணப்போவதோ மூன்றாம் ஈழப்போர்.
Author - Mohana Ruban
- Pages - 396
Styled With